சக்கரபாணி கண்ட ஒட்டன்சத்திரம்

கடந்த 25 ஆண்டுகளாக, ஒட்டன்சத்திரத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அர.சக்கரபாணி அவர்கள், தொகுதி  முழுக்க பல திட்டங்களை செயல்படுத்தி, வளர்ச்சி கட்டமைப்புகளை ஏற்படுத்தியும், மேம்படுத்தியும் உள்ளார். தான் கனவு கண்ட சிறப்பான ஒட்டன்சத்திரத்தை உருவாக்குவதற்கு, இன்றளவும் அவர் உறுதிபட உழைத்துக் கொண்டிருக்கிறார்.  அவரது இந்த பயணத்தில், ஒட்டன்சத்திரம் பெற்ற பயன்கள் ஏராளம். அவற்றுள் சில இதோ:  

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையில் கழக அரசு படைத்த சாதனைகள்!
  • அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.8392.76 கோடி வழங்கப்பட்டது.
  • கொரோனா நிவாரண தொகையுடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று முதல் 977.1 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 வகை பொருள்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பு வழங்கப்பட்டது.
  • 2023 -பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் தொகுப்பு ரூ.2,429 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.
  • பொதுமக்களுக்கு கருப்பு,பழுப்பு அரிசியை நீக்கி தரமான அரிசி வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் தனியார் அரவை ஆலைகள் அனைத்திலும் கலர் சார்ட்டர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
 
  • பொது விநியோகத் திட்டப் பொருள்களை கடத்துபவர்களையும், பதுக்குபவர்களையும், இரும்புக்கரம் கொண்டு அடக்க, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறைக்கு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை தலைமையிடமாகக் கொண்டு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு புதிய மண்டலங்கள் உருவாக்கம்.
  • மே 2021 முதல் நவம்பர் 2022 வரை 188 புதிய முழு நேர நியாய விலைக்கடைகள் மற்றும் 433 பகுதிநேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 621 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
  • ரேசன் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதிலாக அவர்களால் அங்கீகரிக்கப்படும் நபர்களிடத்தில் பொருட்களை வழங்க இதுவரை 1,27,610 நபர்களுக்கு அங்கீகாரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
  • கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 13 லட்சத்து 52 ஆயிரத்து 866 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 இடங்களில் 2,86,350 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்படும் தருவாயில் உள்ளன.
  • நெல்லை பாதுகாப்பாக வைத்து தரமான அரிசி பொதுமக்களுக்கு வழங்கிட நாளொன்றுக்கு மொத்தம் 6800 மெட்ரிக் டன் அரவை திறன் கொண்ட 13 ஆலைகள் அரசு தனியார் பங்களிப்புடன் (Public private partnership) விரைவில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • நெல் கொள்முதல் செய்யும் நடைமுறையை எளிதாக்க இணையவழியில் online நெல் கொள்முதல் செய்யும் நடைமுறை முழுமையாக செயல்படுத்தப்பட்டு விவசாயிகள் பெயரில் தனியார் நெல் கொண்டு வருவது தடுக்கப்பட்டுள்ளது.
 
  • விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனடியாக அரைத்து தரமான அரிசியினை பொதுமக்களுக்கு வழங்க ஏதுவாக 324 தனியார் அரிசி ஆலைகள் புதிதாக சேர்க்கப்பட்டு தற்போது 700 தனியார் அரவை முகவர்கள் மற்றும் 21 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலைகளுடன் அரவைத்திறன் உயர்த்தப்பட்டுள்ளது.
  1.  
  • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் 34,570 தொழிலாளர்கள் பயனடையும் வகையில், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கான ஊதியம் மூட்டை ஒன்றிற்கு ரூ.3.25 இல் இருந்து ரூ.10 ஆகவும், பருவகால பட்டியல் எழுத்தர்களுக்கு சம்பளம் மாதம் ஒன்றிற்கு 2250 ரூபாய் உயர்வுடன் தினப்படியாக ரூ.120ம், பருவகால உதவுபவர்களுக்கும், காவலர்களுக்கும் சம்பளம் மாதம் ஒன்றிற்கு 2309 ரூபாய் உயர்வுடன் தினப்படியாக ரூ.100ம் வழங்கப்பட்டுள்ளது.
  • கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 18 மாதங்களில் மட்டும் பணியில் இருக்கும்போது இறந்த 109 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 586 தற்கால பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
  • கழக அரசு பொறுப்பேற்றவுடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
  • 2021-2022 நெல் கொள்முதல் பருவத்தில் 8,16,007 விவசாயிகளிடமிருந்து 43,28,256 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2022-23 பருவத்தில் டிசம்பர் 28, 2022 வரை 1,32,934 விவசாயிகளிடமிருந்து 8,56,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
  • ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக அரவை முகவர்களுக்கு அரவைக் கட்டணமாக குவிண்டால் பச்சரிசி அரவைக்கு ரூ.10/-லிருந்து ரூ.25/-ஆக உயர்வு! புழுங்கல் அரிசி அரவைக்கு ரூ.20/-லிருந்து ரூ.40/-ஆக உயர்வு.
  • 2022-பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 21 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.
  • ஆதார் எண் அடிப்படையில் விரல் ரேகை சரிபார்ப்பு மூலம் 98.52% பொது விநியோகத் திட்ட பரிவர்த்தனைகள் தொடங்கப்பட்டுள்ளது.
  • பொது விநியோகத் திட்டத்திற்கான துவரம் பருப்பு கொள்முதலில் மட்டும் ரூபாய் 524 கோடி அரசுப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது.
  • 2022-பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 21 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.
  • ஆதார் எண் அடிப்படையில் விரல் ரேகை சரிபார்ப்பு மூலம் 98.52% பொது விநியோகத் திட்ட பரிவர்த்தனைகள் தொடங்கப்பட்டுள்ளது.
  • பொது விநியோகத் திட்டப் பொருளை சேமிக்க 54 கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 12 வட்டங்களில் 12 கிடங்குகள் 28 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் கட்டப்பட உள்ளன.
  • மே-2021 முதல் டிசம்பர்-2022 வரை 12,47,808 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பித்தினை ஏற்று முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளிலிருந்து முன்னுரிமை குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் சீராக்கப்பட்டு பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன.
  • பொது விநியோகத் திட்டப் பொருளை சேமிக்க 54 கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் 12 வட்டங்களில் 12 கிடங்குகள் 28 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் கட்டப்பட உள்ளன.
  • உழவர் பெருமக்கள் நெல் கொள்முதல் தொடர்பான புகார்கள்/ விளக்கங்கள்/ ஆலோசனைகள் பெற 1800 599 3540 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட “உழவர் உதவி மையம்” என்னும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • பொது விநியோகத் திட்டத்திற்கான துவரம் பருப்பு கொள்முதலில் மட்டும் ரூபாய் 524 கோடி அரசுப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது.
Close Search Window