ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட முடியும் என உறுதியாக நம்பிய அர.சக்கரபாணி அவர்கள், கேதையுறம்பு, தேவத்தூர், வாகரை உள்ளிட்ட ஊராட்சிகளில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டுவந்து, புதிய கட்டிடங்களையும் கட்டி தந்துள்ளார். பழனி கீரனூர், கள்ளிமந்தையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தியுள்ளார். மருத்துவம் வேண்டி மக்கள் பல தொலைவு சென்று அவதியுறாமல் இருக்க, ஒட்டன்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி, அதனை 2 கோடி செலவில் விரிவாக்கமும் செய்து மக்கள் பயன்பெற உதவினார். மேலும், கொ.கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தியுள்ளார்.

பல மருத்துவ முகாம்களை நடத்தி, தீவிர மருத்துவச் சிக்கல்கள் உள்ளோரையும், உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவோரையும் கண்டறிந்து, அவர்களது சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நலமடைந்த மக்கள் பலரும் புது வாழ்வு பெற்றுள்ளனர். 

 

கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில், அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் போன்றோருக்கு தேவையான கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தனது சொந்த செலவில் வழங்கியதோடு, ஒரு குடும்ப உறுப்பினர் போல, பல ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றையும் தனது சொந்த செலவில் வழங்கினார். வேலைகளையும், வருவாயையும் இழந்திருந்த பல குடும்பங்கள் இதன் மூலம் பெரிதும் பயனடைந்தனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குப்பைக்கிடங்கு அமைக்க 20 ஏக்கர் நிலம் மற்றும் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்து, வட்ட அரசு மருத்துவமனைக்கு ரூ.24 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளார் அர.சக்கரபாணி அவர்கள்.


கீரனூர் பேரூர், கள்ளிமந்தயம், மிடாப்பாடி, தேவத்தூர் ஆகிய இடங்களிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மருந்தகம், மருந்தக வைப்பறை, மகப்பேறு பிரிவு, சுகாதார வளாகம் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் குடியிருப்பு பணிகளுக்கு ரூ. 4.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

Close Search Window