அர.சக்கரபாணி அவர்களின் கண்காணிப்பின் கீழ், ஒட்டன்சத்திரத்தில் புதிய பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இது, ஒட்டன்சத்திரம் சுற்றத்தில் உள்ள பிரதான பதிவாளர் அலுவலகமாக இருப்பதனால், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடமாக இது உருவாக்கப்பட்டு, அங்கு பணிபுரிவோருக்கும்,  வந்து செல்லும் மக்களுக்கும் பெரிதும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

 

மேலும், கள்ளிமந்தயத்தில் ஒரு புதிய சார் பதிவாளர் அலுவலகமும் கட்டப்பட்டு, தொப்பம்பட்டி மற்றும் அருகாமையில் உள்ள மக்கள் அரசாங்க சேவைகளை எளிதில் அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், அரசாங்க சேவைகளுக்கும் இடையிலான நேரத்தையும், தூரத்தையும் குறைப்பது, அர.சக்கரபாணி அவர்களின் இலக்குகளில் ஒன்றாக எப்போதும் இருந்து வருகிறது.

Close Search Window