சோளம் குலுங்கும் விளை நிலங்களும், தென்னைகள் மிகுந்த தோப்புகளும் ஒட்டன்சத்திரத்திற்கு எழில் சேர்ப்பவையாக மட்டும் இல்லாது, மக்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கின்றன. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் மிகுந்த இங்கு, கால்நடைகளும் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஒரு விவசாயியாக, தனது தொகுதியில் வேளாண் சார்ந்த வளர்ச்சிக்குப் பங்காற்ற முனைந்த சக்கரபாணி அவர்கள், தேவத்தூர், பெரியகோட்டை ஆகிய கிராமங்களில்  கால்நடை மருந்தகம் மற்றும் பல்வேறு சிறிய கிராமங்களில் கால்நடை கிளை நிலையங்கள் கொண்டு வந்துள்ளார். நபார்டு வங்கியின் மூலமாக பல்வேறு கால்நடை மருந்தகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டி தந்துள்ளார். 

மேலும், அவரது முயற்சியால் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

 

குறிப்பாக, தமிழ்நாட்டுக்கே முன்னோடியாக வாகரையில் அவர் கொண்டு வந்த மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம், ஒட்டன்சத்திர தொகுதியின் ஒரு அடையாளமாக வேளாண் வட்டங்களில் மாறிவிட்டது. விவசாயிகளுக்கு மக்காச்சோளம் பயிரிடுவது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதில் தொடங்கி, அவர்கள் அதிக மகசூல் பெற உதவிடுவது வரையிலும் இந்த நிலையம் துணை நிற்கிறது. 

 

மேலும், ஒட்டன்சத்திரத்தில் உழவர் பேரங்காடி கொண்டு வந்தது, நுகர்பொருள் வாணிபக் கிட்டங்கி அமைத்தது என உழவர் தம் விளைப்பொருட்களை வணிகம் செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு, இன்று விவசாயிகள் பலரும் பயன்பெற்றுள்ளனர்.

 

வடகாடு போன்ற மலைக்கிராம ஊராட்சிகளில், வனவிலங்குகளிடம் இருந்து மக்களையும், விளைப்பொருட்களையும் பாதுகாக்க, பல கி.மீ. தொலைவுக்கு வனத்துறை மூலம் சோலார் மின்வேலி அமைத்து, அவர்கள் பயன்பெறவும் சக்கரபாணி அவர்கள் ஆவன செய்துள்ளார். 

 

சுமார் 150 இடங்களில், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும், உயர்த்தவும், சிறு குறு தடுப்பணைகளை அனைத்து ஊராட்சிகளிலும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 300 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ. 26 கோடியில் புதிய காய்கனி சந்தை அமைக்க அனுமதி பெற்றுத்தந்து, விவசாய விளைபொருட்களை சேமித்து வைக்க ரூ.5 கோடி மதிப்பீட்டில் குளிர்பதனக் கிடங்கு அமைத்துக் கொடுத்துள்ளார். அண்மையில் 23.12.22 அன்று  உலக சாதனை நிகழ்வுக்காக இடையகோட்டையில் 117 ஏக்கர் நிலத்தில் 6மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை படைக்க வித்திட்டவர் நமது அர.சக்கரபாணி அவர்கள். அதன் தொடர்ச்சியாக தொகுதி முழுவதும் 5லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

 

ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ. 50 கோடி மதிப்பிலான கால்நடை பராமரிப்பு மற்றும் சுய உதவிக் குழுவுக்கு கடன்கள் வழங்கி, புதிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தை துவக்கியவர் அர.சக்கரபாணி அவர்கள்.

Close Search Window