வேளாண் தொழிலுக்குப் பெயர்பெற்ற ஒட்டன்சத்திரம் தொகுதியில், விவசாய கூலி வேலை செய்வோருக்கும் குறைவில்லை. பிள்ளைகளைப் பள்ளிக்குத் தாட்டிவிட்ட பிறகு, அடுத்த நாள் கஞ்சிக்காக, அடுத்தவர் நிலத்தில் அயராது உழவு செய்யும் தினக்கூலிகள் இங்கு ஏராளம். அவர்களுக்கு தொழில் பாதுகாப்பை ஏற்படுத்திட விரும்பிய அர.சக்கரபாணி அவர்கள், எண்ணற்ற ஏழை விவசாயக் கூலிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கி உதவியுள்ளார்.

 

அதுமட்டுமல்லாது, பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மக்கள் சுமார் 5000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, அவர்களது வாழ்க்கை சிறந்திட வழிவகை செய்துள்ளார். 

 

மேலும், முதியோர், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர் என உதவி தேவைப்பட்ட, சுமார் 20,000 பேருக்கு உதவித்தொகை வழங்கி அவர்களது துயர் துடைக்க துணை நின்றுள்ளார்.


மக்கள் தங்களது தேவைகளுக்கு பல தொலைவு அலையாதிருக்க, ஒவ்வொரு ஊராட்சி மற்றும் குறு வட்டங்களில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டிக் கொடுத்துள்ளார். மேலும், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுத்து, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் தங்கும் விடுதியும் அமைத்துக் கொடுத்துள்ளார். 

  • ஒட்டன்சத்திரம் தொகுதியில் சுமார் 3000 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.
  • ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
  • ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டித் தந்தது.
  • தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் அமைத்து தந்தது.
  • கேதையுறம்பு ஊராட்சியில் 7.5 ஏக்கர் நிலத்தில் ரூ.81 கோடி மதிப்பீட்டில் புதிய ஆவின் பால் பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.
Close Search Window