வீரபாண்டிய கட்டபொம்மன் 1799இல் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட பின்னர், அவரது சகோதரர் ஊமைத்துரை திண்டுக்கல்லுக்கு வந்து, ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சிகர இராணுவத்தை வழிநடத்த விருப்பாச்சி கோபால் நாயக்கரின் உதவியை நாடினார். கோபால் நாயக்கரின் தலைமையில், கோவையில் உள்ள ஆங்கிலேயர் கோட்டையைத் தாக்க ஒரு திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஆங்கிலேயர்கள் விருப்பாச்சி கோபால் நாயக்கரை கைப்பற்றி 1801 இல் தூக்கிலிட்டனர். இதனால், அந்த புரட்சியும் முடிவுக்கு வந்தது. சுதந்திரம் பெற, ஆங்கிலேயருக்கு எதிராக துணிச்சலாக போராடிய அவர் மறைந்த பிறகும், அவரது வீரமும், நாட்டுப்பற்றும் இன்னும் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கின்றது. திமுக ஆட்சியின் போது இந்த மண்ணின்  துணிச்சலான அந்த மைந்தனுக்கு, சிறப்பான ஒரு நினைவுச்சின்னம் கட்டியது எம்.எல்.ஏ சக்கரபாணி அவர்கள் தான். நமது இந்த சிறந்த வரலாற்று வீரர், ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் கௌரவிக்கப்படுவது, இன்னும் பல இளைய தலைமுறையினரிடத்தில் அவரது உயர்ந்த வரலாற்றை கொண்டு செல்ல உதவி கொண்டிருக்கிறது. மேலும், அவர்தம் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Close Search Window