பல ஆண்டுகளாக, ஒட்டன்சத்திரம் தொகுதி மக்கள் நீதியை அணுக திண்டுக்கல் மற்றும் பழனி வரை பயணிக்க வேண்டியிருந்தது. 80 கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில், இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மிகப்பெரிய சட்டமன்றத் தொகுதியாக இருப்பதனால், சாதாரண பொதுமக்கள் நீதி வேண்டி நீதிமன்றத்தின் வாசல்படியை சென்றடைய  பல சிக்கல்களை சந்தித்தனர். ஒட்டன்சத்திரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவ உதவியதன் மூலம், நீதி இன்று மக்களை நெருங்கி வந்துள்ளது. மேலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை ஒட்டன்சத்திரத்தில் நிறுவியதன் மூலம், ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதிமன்றத்தை எளிதில் அணுகும் அடிப்படை உரிமைக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன்,  அர.சக்கரபாணி அவர்களின் முயற்சியால், ஒட்டன்சத்திரத்தில் ஒரு புதிய சார்பு நீதிமன்றமும் வரவிருக்கிறது.

Close Search Window