சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த ஒட்டன்சத்திரத்தை, நகராட்சியாக தரம் உயர்த்திய சக்கரபாணி அவர்கள், பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியும், செயல்படுத்தியும் இந்த நகராட்சியை மேம்படுத்தியுள்ளார். நகராட்சியில் உள்ள பழனிசாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தும், பழனி மெயின் ரோடு முதல் பிஎஸ்என்எல் அலுவலகம் வரை, தாராபுரம் சாலை முதல் நாகணம்பட்டி பைபாஸ் ரோடு சாலை வரை செண்டர்மீடியா விளக்குகள் அமைத்தும் ஒளிரூட்டியுள்ளார்.

 

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 1.5 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையத்தை அமைத்து, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அமைந்துள்ள சின்னக்குளத்தை 7 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரி, பூங்கா அமைக்க அனுமதி பெற்று தந்துள்ளார். மேலும், புதிய தீயணைப்பு நிலைய அலுவலகம் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு அமைத்தது, 1.5 கோடி செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைத்தது, புதிய விருந்தினர் மாளிகை கட்டியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

 

மேலும், ரயில்வே கீழ் பாலம் அமைத்தது, கலையரங்கம் கட்டியது, அரசு கருவூலத்திற்கு புதிய கட்டிடம் கொண்டு வந்தது, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கொண்டு வந்தது, புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டி கொடுத்தது, தாய்கோ வங்கி கொண்டு வந்தது என ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பல புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.  

 

அம்பிளிக்கை, வாகரை, கள்ளிமந்தையம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பகுதிகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைத் தொடங்கியது முதல், நகராட்சியில் முதன் முதலில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தியது வரை, பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். 

 

இதன்மூலம், வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை மக்கள் எளிதில் அணுகவும், அவற்றை பயன்படுத்தவும் முடிந்து வருகிறது.

  • ஒட்டன்சத்திரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு சொந்தக் கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.3.0 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு 2000 வீடுகள் கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
  • கீரனூர் பேரூராட்சியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு 1000 வீடுகள் கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.
  • ஒட்டன்சத்திரம் நகரத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க அனுமதி பெற்றுத்தரப்பட்டுள்ளது.
  • விருப்பாச்சி தாழையூத்து அருவி பரப்பலாறுஅணை சுற்றுலாத்தளமாக்க அனுமதி பெற்றுத்தந்தது.
Close Search Window