பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பின்தங்கியிருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கைகளில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என விரும்பிய சக்கரபாணி அவர்கள், தனது முயற்சியால், 200 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் மூலம் 3 கோடி செலவில் கீரனூரில் வீடுகளைக் கட்டி கொடுத்துள்ளார். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு குறைவின்றி இப்போது மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

 

மேலும், மக்கள் வாழும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளைப் பராமரிக்க, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கியுள்ளார். 

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட குடும்பங்களுக்கு அரசு தொகுப்பு வீடுகளைக் கட்டி கொடுத்து, அவர்களது சமூக-பொருளாதார நலனுக்கு வழிவகை செய்துள்ளார். 

 

மேலும், ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை, தேவத்தூர், தொப்பம்பட்டி, பெரியகோட்டை, கள்ளிமந்தையம், கீரனூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவியருக்கான விடுதி கட்டிடங்களை கட்டிக் கொடுத்து உதவியுள்ளார்.

Close Search Window