மக்கள் எந்த சிரமமும் இல்லாமல் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு, ஒட்டன்சத்திரம் தொகுதி தோறும் நியாய விலைக் கடைகளை அமைக்க அர.சக்கரபாணி அவர்கள் ஏற்பாடு செய்தார். குறிப்பாக, மக்கள் தொகை அடிப்படையில் ஒட்டன்சத்திரம் ஒன்றியம், தொப்பம்பட்டி ஒன்றியம், கீரனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் புதிய நியாய விலைக் கடைகள், பகுதி நேர நியாய விலைக் கடைகள் அமைத்து மக்கள் பயன்பெற ஆவன செய்தார். 

 

மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நியாய விலைக் கடைகளை அமைத்து கொடுத்ததோடு, இந்த கடைகள் யாவும் பாதுகாப்பாக செயல்பட புதிய கட்டிடங்களையும் கட்டிக் கொடுத்துள்ளார்.

மேலும், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், தொப்பம்பட்டி ஒன்றியம், ஒட்டன்சத்திரம் நகரம் ஆகிய பகுதிகளில் 26 நகரும் நியாயவிலைக் கடைகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சுமார் 7000 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கி தொகுதியில் சுமார் 39 புதிய நியாய விலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

Close Search Window