நவீன கால வளர்ச்சியைக் குறிக்கும் முக்கிய குறியீடுகளுள் ஒன்றான மின்சார வசதி எட்டா கனியாய் இல்லாது, மக்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதில் அர.சக்கரபாணி அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தார். அதன் பயனாக, இருள் வானின் நிலவொளி தவிர்த்து இரவில் வேறு எந்த வெளிச்சத்தையும் கண்டிடாத பலருக்கும், இரவு நேரங்களில் தங்கள் தட்டுகளில் உள்ள உணவை வெளிச்சத்தில் சாப்பிடும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது. 1947 முதல் இருளிலேயே தவித்துக் கொண்டிருந்த சிறுவாட்டுக்காடு, சிறுவாட்டு கோம்பை, புலிகுத்திக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்கள்,  அர.சக்கரபாணி அவர்களின் முயற்சியால் முறையான மின்சார வசதி பெற்றன.

வாகரை, சின்னக்காம்பட்டி, சிந்தலவாடம்பட்டி உள்ளிட்ட இடங்களில் துணை மின்நிலையங்கள் ஏற்படுத்தியது, தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மின் விளக்குகள் அமைத்து கொடுத்தது என மின்சார பொது கட்டமைப்புகளை முன்னேற்றுவதிலும் அவர் அதிக கவனம் செலுத்தினார்.

 

விவசாயிகளுக்கு இலவசமாக மும்முனை மின்சாரம் வழங்கியது, பழுதாகும் மின்கடத்திகளை 24 மணி நேரத்துக்குள்ளாக சரி செய்வது என விவசாயிகளின் மின் தேவையையும் பூர்த்தி செய்ய முக்கியத்துவம் அளித்து பங்காற்றினார்.

மரிச்சிலம்பு ஊராட்சியில் 13 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.13 கோடி மதிப்பீட்டில் 150 கே.வி திறன் கொண்ட துணை மின்நிலையம் மற்றும் தும்பலப்பட்டி, கேதையுறம்பு ஆகிய ஊராட்சிகளில் 130.22 கே.வி திறன்கொண்ட துணை மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Close Search Window