கிராமங்கள் அனைத்தும் பொதுவாகவே, சேற்றுச் சாலைகள் நிறைந்ததாகவே சித்தரிக்கப்படும். அந்த வரையறைக்குள் ஒட்டன்சத்திர கிராமங்களின் சாலைகளை அடக்க முடியாதவாறு, அர.சக்கரபாணி அவர்களின் அயராத முயற்சியால் கிட்டதட்ட 1000க்கும் அதிகமான கிராமத்து சாலைகள், தார் சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த சாலைகள், போக்குவரத்துக்கு மட்டுமன்றி, மக்கள் தங்களது அன்றாட அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம் போன்றவற்றை எளிதில் அணுகக்கூடிய வகையிலும் பயன்பட்டு வருகின்றன.

மேலும், திருக்கவுண்டன்வலசு கிராமம் போன்று அதுநாள் வரையிலும் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த கிராமங்களுக்கு, சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு வளர்ச்சி, வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தரமான சாலைகள் கொண்டு தொகுதிக்கு வளம் சேர்க்க முனைந்த அர.சக்கரபாணி அவர்கள், தாளையூத்து-தாடிக்கொம்பு, மஞ்சநாயக்கன்பட்டி-மூலனூர், அம்பிளிக்கை-குத்திலுப்பை, ஒட்டன்சத்திரம்-மார்க்கம்பட்டி, கேதையுறம்பு-இடையக்கோட்டை, தாராபுரம் சாலை-கே.டி.பாளையம், பழனி ஆயக்குடி-பொருளூர், பழனி புளியம்பட்டி-வடபருத்தியூர், ஒட்டன்சத்திரம்-சாலக்கடை உள்ளிட்ட பல ஒருவழிச் சாலைகளை இருவழிச் சாலைகளாக தரம் உயர்த்தியுள்ளார். 

 

18 கோடியில் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் சீரமைப்பு பணிகள்  நடைபெற்று, சாலைகள் மேம்படுத்தப்பட்டு, விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒட்டன்சத்திரம்-அவிநாசி நான்கு வழிச்சாலைத் திட்டம், 3000 கோடி மதிப்பீட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் மெட்டூர்-மடத்துக்குளம்-ஒட்டன்சத்திரம்-பொள்ளாச்சி வரையிலான நான்கு வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட நான்கு வழிச்சாலைத் திட்டங்களும், 150 கோடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் அமைக்கப்பெற்ற சுமார் 10 கி.மீ தொலைவிலான ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலைத் திட்டமும் தொகுதி தாண்டி, பல்வேறு விதமாக, பலதரப்பட்ட மக்களுக்கும் பயன் தந்து கொண்டிருக்கின்றன.

 

20 கோடியில் அத்திக்கோம்பை ரயில்வே மேம்பாலம், வெரியப்பூர்-மார்க்கம்பட்டி சாலையில் மூன்று மேம்பாலங்கள், விருப்பாட்சி, காவேரியாம்பட்டி, சாமியார்புதூர் உள்ளிட்ட பல கிராமங்களில் பாலங்கள் என தொகுதிதோறும் 50க்கும் அதிகமான சிறிய, பெரிய பாலங்கள் அமைத்து தந்துள்ள அர.சக்கரபாணி அவர்கள், திருக்கவுண்டன்வலசு போன்ற கிராமங்களில் தனது சாலைத் திட்டங்கள் மூலம் வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கியுள்ளார்.

  • அரசப்பபிள்ளைபட்டி முதல் கணக்கன்பட்டிவரை ரூபாய் 127.3 கோடி மதிப்பீட்டில் 24.3 கி.மீ சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
  • லெக்கையன் கோட்டை முதல் ஒட்டன்சத்திரம் நகராட்சி வழியாக அரசப்பபிள்ளைபட்டி  வரை ரூ. 80 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • கணக்கன்பட்டி முதல் மடத்துக்குளம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது.
  • தொகுதியில் உள்ள பல்வேறு ஊராட்சி சாலைகளை சுமார் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்த அனுமதி பெற்றுத்தந்தது.
Close Search Window