நாட்டிற்கே வழிகாட்டும் நான்காம் ஆண்டில் திராவிட மாடல் அரசு:
இந்தியாவுக்கே வழிகாட்டும் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமையிலான திராவிட மாடல் அரசு, மூன்றாண்டுகளில் முத்திரை பதித்து நான்காம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” எனும் கொள்கை முரசு ஆட்சிபீடத்தை அலங்கரிக்கத் தொடங்கியதன் அடியொற்றி, ஒடவை மக்களின் குரலாய் தொடர்ந்து அர.சக்கரபாணி எனும் நான் அரசின் உணவுத்துறை அமைச்சராக நான்காம் ஆண்டில் ஓங்கி ஒலித்து வருகிறது.
வரலாற்று வெற்றியில் ஒடவை:
இருள்காற்றை கிழித்து வெளிச்சப்புள்ளிகளை வாரிவீசுகிற மேன்மைச் சூரியனாக 2021,ஏப்ரல் திங்கள் 6ஆம் நாளன்று நமது தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினரும், அரசின் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சருமான உயர்திரு.அர.சக்கரபாணி BA அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே பெருவாரியான வாக்குகளை பொதுமக்கள் நம்பிக்கையோடு அள்ளித்தந்தனர்.அதைத்தொடர்ந்து 2021 மே, 2 ஆம் நாளன்று வாக்குகள் எண்ணப்பட்டு, 6வது முறையாக சரித்திரத்தின் பெருவாரியான வெற்றி ஒடவையில் பதிவுசெய்யப்பட்டது.
3 ஆண்டுகளில் தொகுதியில் நிகழ்த்திய சாதனைகள் ஒரு சில:
ஆட்சிப்பொறுப்பேற்ற இந்த மூன்றாண்டுக்குள் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் – 2 அரசுக் கலைக்கல்லூரி – 1 ITI தொழிற்பேட்டை கல்லூரி – மாணவ மாணவிகள் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு காளாஞ்சிபட்டியில், கலைஞர் நூற்றாண்டு இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் – விவசாயிகள் நலன் கருதி குளிர்பதன சேமிப்பு கிடங்கு – அனைத்து ஊர்களிலும் சாலை வசதி – சமுதாயக்கூடம் போன்ற எண்ணற்ற சாதனைகளால் ஒட்டன்சத்திரத்தை தமிழ்நாட்டின் வரைபடத்தில் உயர்த்திக் காட்டியுள்ளார்.
3 ஆண்டுகளில் உணவுத்துறையில் நிகழ்த்திய சாதனைகள் ஒரு சில:
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் விவசாயிகளின் நலனுக்காக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 230 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடங்கள் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 20 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கழக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் 31-08-2023 வரை 15 இலட்சத்து 6 ஆயிரத்து 189 புதிய குடும்ப அட்டைகள்,கொரோனா ஊரடங்கால் 2022 ஆம் ஆண்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா.4,000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.8392.76 கோடி-மே-2021 முதல் ஆகஸ்ட்-2023 வரை 370 புதிய நியாய விலைக்கடைகள் மற்றும் 672 பகுதிநேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1042 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் 122 முழுநேர நியாயவிலைக் கடைகளுக்கும், 59 பகுதி நேர நியாயவிலைக் கடைகளுக்கும் புதிய கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை உணவுத்துறையில் நிகழ்த்திக் காட்டியவர் நமது அமைச்சர் பெருமகனார் அவர்கள்.இன்னும் எஞ்சியிருக்கும் இரண்டாண்டில், ஒட்டன்சத்திரம் தொகுதியை தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்ற அனைத்து வகையிலும் நமது ஆற்றல்மிக்க அமைச்சர் அவர்கள் பாடுபட்டுக்கொண்டுவருகிறார், பாடுபட்டுக்கொண்டிருப்பார், தொடர்ந்து பாடுபடுவார்.
அயராத உழைப்பும், ஆழ்கடல் நிதானமும்:
தனது உழைப்பையும் ஆற்றலையும் தொகுதி மற்றும் மாவட்டம் கடந்து மேலும் கூடுதலாக, கோவை – திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சராகவும் தலைமையின் விருப்பப்படி தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நமது நல்லாட்சி நாயகர் மாண்புமிகு முதல்வர் அவர்கள் சொன்னதைப்போல,தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு மட்டுமன்றி, வாக்களிக்காத மக்களுக்கும் அயராது உழைத்து வரும் நமது அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கழகப் பணியும், மக்களுக்கான வளர்ச்சிப் பயணமும் இன்னும் பல படிநிலைகளைத் தாண்டி அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
3 ஆண்டுகளில் 30 ஆண்டுகால சாதனைகள்:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 – விடியல் பேருந்து பயணம் – மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம் – முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் – மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் – நான் முதல்வன் – விவசாயிகளுக்கென தனி வேளாண் நிதி நிலை அறிக்கை – விளையாட்டுத்துறையில் புதுப்பாய்ச்சல் – ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தொழில்துறை திட்டங்கள் – கலைஞர் நூற்றாண்டு நூலகம் – கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை – கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகளை செய்து வெற்றி நடைபோட்டு வருகிறது. மேலும் அடுத்தடுத்த காலங்களில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை குவிக்கும். நம் திராவிட மாடல் அரசு இன்னும் பல உயரங்களைத் தொட, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, வரவுள்ள நாட்களில் இன்னும் அயராது உழைப்போம்.