விவசாயம் மற்றும் கூலித் தொழில்களை பிரதானமாக கொண்டுள்ளது, ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள கொக்கரக்கல்வலசு கிராமம். ஆடுகளை மேய்ச்சலுக்கு விரட்டிச் செல்லும் மூதாட்டிகளையும், அரிவாள் கொண்டு கருவேலம் கிளைகளை வெட்டிக் கொண்டிருக்கும் ஆட்களையும் இங்கு காண முடியும். ராஜாம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள இந்த கிராமம், ஒட்டன்சத்திரம் டவுனில் இருந்து மிக தொலைவில் உள்ளது. இங்கு வசிக்கும் மாணவ-மாணவியருக்கு கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும் பொருட்டு, அரசு நடுநிலைப் பள்ளியொன்று நிறுவப்பட்டு இருந்தது. 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்த இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள், மேற்கொண்டு கல்வி பயில்வதற்கு, பல தொலைவு பயணிக்க வேண்டிய சூழல் இருந்தது.
இது, மாணவர்களது கல்வி பாதையில் தடையாய் நின்றதனால், அவர்கள் எழுத்தாணியை விடுத்து ஏர்கலப்பைகளை சுமந்து வேலை செய்யத் தொடங்கினர். பெண் குழந்தைகள் பலருக்கும், கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, கணவன் வீடுகளுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால், கிராமங்களில் உள்ள கல்வி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்த ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி, கொக்கரக்கல்வலசு, கூத்தம்பூண்டி, கரியாம்பட்டி, பூலாம்பட்டி, சாமிநாதபுரம், பொருளூர், தொப்பம்பட்டி, கணக்கன்பட்டி, இடையகோட்டை, புளியமரத்துக்கோட்டை, மஞ்சநாயக்கன்பட்டி, தாளையூத்து, காவேரியம்மாபட்டி, மார்க்கம்பட்டி, ஓடைப்பட்டி, சத்திரப்பட்டி, பெரியகோட்டை, பரப்பலாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருக்கும் 30 க்கும் அதிகமான அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளார். அதன் பயனாக, கொக்கரக்கல்வலசு அரசுப் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில், 12 ம் வகுப்பு வரை மாணவ-மாணவியர் அந்தந்த கிராமங்களிலேயே படிக்கின்றனர்.
மேலும், மாணவ-மாணவியரின் வசதிக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி, நபார்டு வங்கி மூலம் பெறப்பட்ட நிதி போன்றவற்றைக் கொண்டு, புதிய வகுப்பறை கட்டிடங்கள், கழிப்பறை கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள், பல பள்ளிகளில் கட்டப்பட்டுள்ளன. இதனால், மாணவ-மாணவியரின் இடைநிற்றல் குறைந்ததோடு, பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, மேற்படிப்புக்கு பல மாணவர்கள் முனைப்புடன் இணைந்துள்ளனர். இது பற்றி பேசிய கொக்கரக்கல்வலசு கிராமத்து அரசுப் பள்ளியின் ஆசிரியர், அந்த பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் மருத்துவர் ஆனதை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார். சாதிக்க காத்திருக்கும் இன்னும் ஏராளமான மாணவர்களுக்கு, வாய்ப்புப் படிக்கட்டுகளாக இந்த பள்ளியும், ஒட்டன்சத்திரத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள இன்னும் பல பள்ளிகளும் இருந்து வருகின்றன.
உயர் கல்வித்துறை சார்பில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க சொந்தமான கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 12.50 கோடியும், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் சார்பாக புதிய மகளிர் கல்லூரி மற்றும் விருப்பாச்சியில் புதிய தொழில் பயிற்சி நிலையம்(ITI) மற்றும் காளாஞ்சிபட்டியில் அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் அதற்கு ரூ. 7 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டிடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனங்களுடன் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் கலையரங்கம் அமைத்தது.
ஒட்டன்சத்திரம் கி.ரெ. அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் 4.35கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அரசு பள்ளிகளின் மராமத்து பணிகளுக்கு சுமார் ரூ.90 லட்சம் நிதி பெற்றுத் தரப்பட்டுள்ளது.
Riverside City Hall
8353 Sierra Avenue • Riverside, CA 91335
Phone: (907) 350-7400 • Monday – Thursday, 8:00 am – 6:00 pm
Useful Links
Quick Links
- Request a 311 Service
- Departments
- How do I…
-
Icons made by Zlatko Najdenovski from www.flaticon.com