வசதி படைத்தோர் மட்டுமே நினைத்த நேரத்துக்கு, நினைத்த இடத்திற்கு சென்று வர முடியும் என்று இருந்த நிலையை மாற்ற முனைந்த அர.சக்கரபாணி அவர்கள், தொகுதி தோறும் 70க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்களை அமைத்துள்ளார். எழில் சூழ்ந்த சுற்றத்துக்குள் பயணித்துச் செல்லும் இந்த வழித்தடங்கள், பலதரப்பட்ட மக்களுக்கு பல்வேறு பயன்களை தந்துள்ளன. அங்காடிகளை அணுகுவதற்கு மட்டுமன்றி, அவசர காலங்களிலும் மக்களுக்கு இவை கை கொடுத்துள்ளன. உள்ளூரில் மட்டுமல்லாது, மக்கள் வெளியூர் பயணங்களையும் சுலபமாக மேற்கொள்ள உதவிடும் நோக்கில், திண்டுக்கல், இடையக்கோட்டை, கள்ளிமந்தையம், தொப்பம்பட்டி, கீரனூர் வழியாக பொள்ளாச்சிக்கு 3 பேருந்து வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.

அடுத்த ஊர்களுக்கு வாக்கப்பட்டு சென்ற மகள்களை காண விரும்பும் கிராமத்துப் பெற்றோருக்கும், கல்வி பயில தொலைதூரம் செல்ல விரும்பும் மாணவர்களுக்கும், அடுத்த ஊரில் வேலைப் பார்க்கும் இளைஞர்களுக்கும், இன்னும் ஏராளமான மக்களுக்கும் இது பெருமளவில் உதவி புரிந்து வருகிறது.

 

பேருந்து சேவை மட்டுமல்லாது, பழனி முதல் சென்னை வரை புதிய ரயில் சேவையை கொண்டு வந்து, மக்களின் தொலைதூர பயணங்களை எளிதாக்கியுள்ளார்.  மேலும், திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரையில் சுமார் 300 கோடி மதிப்பில் அகல ரயில் பாதையும் அர.சக்கரபாணி அவர்களின் முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

இவற்றுடன், புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கொண்டு வந்தது, பயணியர் மாளிகை கட்டியது என புதிய கட்டடங்கள் மூலம் தொகுதியில் போக்குவரத்து துறைக்கான கட்டமைப்புகளையும் தரம் உயர்த்தியுள்ளார்.

Close Search Window