அர.சக்கரபாணியைப் பற்றி
செழுமையான வயல்களுக்கும், கள்ளிமந்தையத்தின் சேற்றுச் சாலைகளுக்கும் நடுவே நடந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் இலட்சிய கனவொன்றை கொண்டிருந்தான். தன்னைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கைகளை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவதே அந்த கனவு. 1996இல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வாகிறான் அந்த இளைஞன். ஊர் மக்களின் இதயங்களில் இன்பத்தை புகுத்தும் தனது இலட்சிய கனவுகளை செயல்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பாக அதனை பயன்படுத்தியும் கொள்கிறான்.
சக்கரபாணியைப் பற்றி
செழுமையான வயல்களுக்கும், கள்ளிமந்தையத்தின் சேற்றுச் சாலைகளுக்கும் நடுவே நடந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் இலட்சிய கனவொன்றை கொண்டிருந்தான். தன்னைச் சுற்றியுள்ளோரின் வாழ்க்கைகளை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவதே அந்த கனவு. 1996இல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வாகிறான் அந்த இளைஞன். ஊர் மக்களின் இதயங்களில் இன்பத்தை புகுத்தும் தனது இலட்சிய கனவுகளை செயல்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பாக அதனை பயன்படுத்தியும் கொள்கிறான்.
பசுமைக்கு பெயர்பெற்ற ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் கள்ளிமந்தையம் எனும் கிராமத்தில் ஏப்ரல் 10, 1961இல் பிறந்தார் அர.சக்கரபாணி. பள்ளிப் படிப்பை கள்ளிமந்தையத்திலேயே முடித்த அவர், தனது பள்ளிப் பருவத்தில் விளையாட்டுகளில் பேரார்வம் கொண்டிருந்தார். கபடி விளையாட பக்கத்து கிராமங்களுக்கு சென்ற நாட்களில், ஆற்றலும், உத்வேகமும் நிறைந்த இளைஞராக இருந்த அவரைக் கண்டு, மக்கள் அன்பும், ஆதரவும் பொழிந்தனர். அப்போதிருந்தே, புன்னகை நிறைந்த முகத்துடைய அர.சக்கரபாணி, ஒட்டன்சத்திர மக்கள் மனங்களில் காலத்திற்கும் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த அர.சக்கரபாணி, சிறு வயது முதலே மண்ணின் மீதும், மண்ணின் மக்கள் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த ஈடுபாடு, பின்னாட்களில் அவர் அரசியலில் நுழைய பெரிய ஊக்கமாக அமைந்தது. திமுக அபிமானிகள் நிறைந்த குடும்ப பின்புலத்தை கொண்டதால், இளமைக் காலம் தொட்டே, திராவிடகொள்கைகள் மீதும், திமுகவின் மீதும் அதிக கவனமும், ஆர்வமும் செலுத்தி வந்தார். மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை படிப்பு பயிலும் போது, அவரது உள்ளத்தில் உயிர்ப்புடன் இருந்த அரசியல் ஆர்வம், அவரை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. கல்லூரி காலத்தில், திமுகவில் இணைந்து, உடன்பிறப்புகளில் ஒருவரானார். தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபடுவது, கள யதார்த்தங்களை அறிந்து கொள்வது என அரசியல் களத்தில் அனைத்து விதமான அனுபவங்களுக்கும் தன்னை அர்ப்பணித்தார். மேடைகள், மன்றங்கள், மாநாடுகள் என கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி மக்களை சந்தித்து, அவர்களது உணர்வுகளையும், வலிகளையும் புரிந்து கொண்டார்.
பல ஆண்டுகள் மக்கள் பணி செய்ததன் பயனாக, 1996இல் திமுகவின் ஒட்டன்சத்திர தொகுதி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் வாய்ப்பை, திமுக முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், தென்பாண்டி சிங்கம் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களும், அர.சக்கரபாணிக்கு வழங்கினர். அந்த தேர்தலில் வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினராக பதிவியேற்றார் அர.சக்கரபாணி. தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு, தான் ஆற்ற வேண்டிய கடமையின் குரலாய் சட்டமன்றத்தில் அவர் அயராது உரக்க ஒலித்தார். அதன் பலனாக, எண்ணற்ற திட்டங்கள் ஒட்டன்சத்திரத்தில் செயல்படுத்தப்பட்டன. அவரது உழைப்பின் சான்றுகள், ஒட்டன்சத்திர சாலைகளிலும், கூரை வீட்டு குழாய்களிலும் வெளிப்பட்டன. அவரால் மக்கள் அடைந்த பலன்களின் எதிரொலி, அடுத்தடுத்த அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் அவருக்கு வெற்றிக் கனியைப் பெற்றுத் தந்தது.
தனது ஊர்மக்களை உறவுகளாகவே கருதும் அர.சக்கரபாணி, ஒட்டன்சத்திரத்தின் சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இல்லாது, ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராகவே இருக்கிறார். சுலபமாக அணுகக்கூடிய தன்மை, எளிமையாக பழகும் பண்பு போன்றவற்றால் மக்களின் நேசத்தை அவர் உடைமையாக்கிக் கொண்டிருக்கிறார்.
அவர், சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான போது, தொகுதியில் தலையாயதானதாக இருந்த குடிநீர்த் தட்டுப்பாடை தீர்க்க பெரும் சிரத்தையோடு உழைத்தார். எண்ணற்ற மேல்நிலைத் தொட்டிகளை கட்டியதோடு, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வளிக்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர அயராது உழைத்தார். அந்த கடின உழைப்பின் பலன், 2006ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து, முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களும், அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்களும் அறிமுகப்படுத்திய காவிரி கூட்டு குடிநீர்த் திட்டத்தில் வெளிப்பட்டது. அதன் நீட்சியாக, ஒட்டன்சத்திரத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு வெகுவாக குறைந்தது. அர.சக்கரபாணியின் உறுதியான நம்பிக்கையும், திமுகவின் தொலைநோக்கான ஆட்சியுமே, இன்று ஒட்டன்சத்திர வீடுகளில் குடங்கள் நிரம்பியிருக்கக் காரணம்.
குடிநீருக்கு அடுத்தபடியாக, குழந்தைகளுக்கான கல்வி கட்டமைப்புகளில் கவனம் செலுத்தினார் அர.சக்கரபாணி. அவரது கால் நூற்றாண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பயணத்தில், எண்ணற்ற அரசுப் பள்ளிக்கூடங்களைத் தரம் உயர்த்தியும், மறுசீரமைப்பு செய்தும் உள்ளார். மேலும், ஒட்டன்சத்திரத்தில் மருத்துவர்களாக, அரசு அலுவலர்களாக இருக்கும் பலரது கல்விக்கும் அர.சக்கரபாணி உதவியுள்ளார்.
தனது தொகுதியிலும், அதனைத் தாண்டியும், பலருக்கும் தன் திறனுக்கு முடிந்த வரை, எண்ணற்ற உதவிகளை பாசத்துடன் இன்றளவும் செய்து கொண்டே இருக்கிறார். 1996இல் இருந்து ஒட்டன்சத்திரத்தின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் மீண்டும் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், சோர்வென்பது அவரை என்றும் அண்டியதே இல்லை. அன்றும், இன்றும், என்றும் மக்களின் குரலுக்கு அவர் ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்.
அர.சக்கரபாணியின் இந்த இலட்சிய பயணம், முற்றுப்புள்ளியை இழந்து, கனவுகளை கைப்பற்ற இன்னும் வேகமாக விரைந்து கொண்டே தான் இருக்கிறது.
Riverside City Hall
8353 Sierra Avenue • Riverside, CA 91335
Phone: (907) 350-7400 • Monday – Thursday, 8:00 am – 6:00 pm
Useful Links
Quick Links
- Request a 311 Service
- Departments
- How do I…
-
Icons made by Zlatko Najdenovski from www.flaticon.com