ஒட்டன்சத்திரம் தொகுதியில் மிகவும் தலையாயது குடிநீர் பிரச்சனை. காலியான குடங்கள், தண்ணீர் சிந்தாத குழாய்கள் என குடிநீர் பற்றாக்குறையால் தொகுதி மக்கள் அவதியுற்றிருந்ததை நன்கு உணர்ந்திருந்த அர.சக்கரபாணி அவர்கள், சட்டமன்ற உறுப்பினராக தனது கன்னி பேச்சு தொடங்கி இன்று வரை குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த் தொட்டிகள், வேலை முடிந்து வீடு திரும்புவோருக்கு தண்ணீர் தேடி அலையும் சுமையைக் குறைத்து, பெரிதும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.
18 கோடியில் சுமார் 175 கிராமங்கள் பயன்பெறுகிற பாலாறு-பொருந்தலாறு கூட்டு குடிநீர் திட்டம், 21 கோடியில் நல்லதங்காள் அணைக்கட்டு திட்டம், சுமார் 250க்கும் அதிகமான குடியிருப்புகள் பயன்பெறுகிற நத்தம் கூட்டு குடிநீர் திட்டம், 9 ஊராட்சிகள் பயன்பெறுகிற நங்காஞ்சி ஆறு அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம், 6 ஊராட்சிகள் பயன்பெறுகிற அமராவதி, சண்முகாநதி இணையும் கூட்டாறில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம், 4 ஊராட்சிகள் பயன்பெறுகிற அத்திக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களது வீடுகளுக்கு தண்ணீர் மிகவும் சுலபமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கோடை வெயில் எட்டிப் பார்க்கும் முன்னரே, ஆள்துளை கிணறுகள் மூலம் கிராமங்கள் பலவற்றுக்கும் குடிநீர்த் திட்டங்களை எடுத்துச் செல்வது, திறந்தவெளி கிணறுகளை அமைக்கத் திட்டமிடுவது என தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பெரும் முன்னெச்சரிக்கையுடன் சக்கரபாணி அவர்கள் செயல்பட்டதால், இங்கு பெருமளவில் குடிநீர் தட்டுப்பாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
மேலும், ஒட்டன்சத்திரம் தொகுதியின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தர உறுதி பூண்டுள்ள சக்கரபாணி அவர்களின் முயற்சியால், பரம்பிக்குளம்-ஆழியார் கூட்டு குடிநீர்த் திட்டத்தை ஒட்டன்சத்திரம் தொகுதி முழுவதும் கொண்டு வர ஆய்வுப் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.
- ஒட்டன்சத்திரம் தொகுதியிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்குவதற்காக காவிரி ஆற்றிலிருந்து
- ரூ.930 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது.
- ஒட்டன்சத்திரம் தொகுதி பரப்பலாறு அணை ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருவதற்கு அனுமதி.
- ஒட்டன்சத்திரம் தொகுதி அத்திக்கோம்பை பெருமாள் கோவில் ஓடை, ஓடைப்பட்டி பெரிய ஓடை, சின்ன ஓடை ,ஜவ்வாதுப்பட்டி பெரிய ஓடை ஆகிய ஓடைகளின் குறுக்கே ரூ. 12 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை.
- கொத்தையம் நல்ல தங்காள் அணையில் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கலிங்கு மற்றும் வெள்ள தடுப்புச்சுவர் அமைத்தது.
- பொருளூரில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவிலுள்ள கரிசல்குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீரை 1.கி.மீ பைப்லைன் அமைத்து ராட்சத குழாய் மூலமாக 6குளங்கள், 185 திறந்தவெளி கிணறுகள் பயனடையும் வகையில் திட்டம் கொண்டுவந்தது.
- மானூர் சண்முகநதி ஆற்றின் குறுக்கே ரூ. 3.78 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டுவதற்கு அனுமதி பெற்றுத்தந்தது.
- மானூர் முதல் பெரிச்சிபாளையம் வரை சண்முகநதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றியது.
- நல்லதங்காள் ஓடையில் சுமார் 22 கி.மீ.சீமைக்கருவேல மரங்களை அகற்றியது.
- நங்காஞ்சியாற்றில் சுமார் 18 கி.மீ சீமைக் கருவேல மரங்களை அகற்றியது.
Riverside City Hall
8353 Sierra Avenue • Riverside, CA 91335
Phone: (907) 350-7400 • Monday – Thursday, 8:00 am – 6:00 pm
Useful Links
Quick Links
- Request a 311 Service
- Departments
- How do I…
-
Icons made by Zlatko Najdenovski from www.flaticon.com