General|

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கான பொற்கால ஆட்சியை நடத்தி, பெண்கள் நலனில் அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறார். குறிப்பாக தி.மு.க அரசு கட்சிபாரபட்சமின்றி   வளர்ச்சித் திட்டப்பணிகளைச் செயல்படுத்தி வருகிறது.

உணவுத்துறையை உண்மைத்துறையாக்கி வரும் அமைச்சர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியைப் போல் இல்லாமல் 110 விதியின்படி சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

தமிழ்நாட்டில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.8392.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இதுவரை 13 இலட்சத்து 52 ஆயிரத்து 866 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

2023 பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி,1கிலோ சர்க்கரை,முழுக்கரும்பு, மற்றும் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் சேர்த்து ரூ.2,429 கோடி மதிப்பீட்டில் வழங்குவதற்கு கழக அரசு தயாராகிவருகிறது.

ரேஷன் பொருள்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், ஆதார் எண் அடிப்படையில் விரல் ரேகை சரிபார்ப்பு மூலம் 98.52சதவீத பொது விநியோகத் திட்ட பரிவர்த்தனைகள் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளது.

உணவுத்துறையில் கடந்த கால ஆட்சியில் இருந்த பல்வேறு குறைபாடுகளை நீக்கி, மாதம் ரூபாய் 50 கோடி மிச்சப்படுத்தப்பட்டு வருகிறது.

வர்ம பிடியினை போட்டு அநியாய கதவினை பூட்டிய அமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன், தரமான அரிசி வழங்கிடவும் நெல் கொள்முதலைச் செம்மையாக்கியும், பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையுடன் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் பலரும் கலந்து கொள்ளும் நிலையை உருவாக்கியும், குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையை வலுப்படுத்தியும், பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை மற்றும் தென்காசி மாவட்டங்களில் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறைக்குப் புதிய அலகுகள் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு ரோந்து வாகனங்களும் சோதனைச் சாவடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கழக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 12,637 வழக்குகள் பதியப்பட்டுள்ளன; 12,721 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 128 பேர்கள் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 90,122 குவிண்டால் அரிசி கையகப்படுத்தப்பட்டு 2,607 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதன் காரணமாக கடந்த ஆட்சியின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அளவிற்கு அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அதிகமான வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளிலிருந்து பொது விநியோகத் திட்டத்திற்கு மாதந்தோறும் அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, மண்ணென்ணை மற்றும் பாமோலின் ஆகிய பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைக் கண்காணிப்பதற்காக கடந்த ஆட்சியில் பொருத்தப்பட்ட 2,869 கண்காணிப்புக் கேமராக்களில் பெரும்பாலானவை சரியான முறையில் இயங்கவில்லை. ஆதலால், பொது விநியோகத் திட்ட பொருள்கள் சரியான முறையில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று சேருவதைக் கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் பொருத்தப்பட்டுள்ள 2,869 கண்காணிப்புக் கேமராக்களைப் பராமரித்துச் சரியான முறையில் இயங்கிடுவதை உறுதி செய்திட தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அலுவலர்கள், பொது விநியோகத் திட்டக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், அரிசி அரவை ஆலைகளின் உரிமையாளர்கள், அரிசிக் கிடங்கு பாதுகாப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் அரிசியைக் கடைகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்கள், அரிசி பெறும் மற்றும் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டில் அரிசிக் கடத்தலே இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டார் நமது மாண்புமிகு உணவு அமைச்சர் அர.சக்கரபாணி  அவர்கள்.

ஆட்சிப் பொறுப்பேற்ற 18 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட உணவு அமைச்சர் ஆகியோர் வழங்கி வருகிறார்கள்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
.

குறள் 945

விளக்கம்
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.

Comments are closed.

Close Search Window