தமிழக தேர்தல் களத்தில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு, தொடர்ந்து வெற்றிபெறுவது என்பது சாதாரண விடயம் அல்ல; அதனை தக்கவைத்துக் கொள்வதும் எளிதான காரியம் அல்ல; பலமுறை வெற்றிபெற்ற ஸ்டார் வேட்பாளர்கள்கூட, தொகுதிமாறியே தங்கள் வெற்றியை தக்கவைத்துள்ளனர்.
அந்தவகையில்,தமிழகத்தில் எந்த அலை வீசினாலும் “ஓயாத திராவிட அலைபோல” MLAக்கள் வெற்றிப்பட்டியலில் அர.சக்கரபாணி அவர்களின் பெயர் இருக்கும். ஆம்,,,, தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் 6வதுமுறை வெற்றிபெற்று சரித்திர சாதனை படைத்தவர் தற்போதைய, தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு அர.சக்கரபாணி அவர்கள்.! அதனால்தான் இவரை தொகுதி மக்கள் “கட்சிகளை கடந்த கதாநாயகன்” என்கின்றனர்.!
இவர் கடந்த 25 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், இதற்குமுன்பு இருமுறை மட்டுமே ஆளுங்கட்சி வரிசையில்,அதுவும் முதல் 5ஆண்டுகள் அறிமுக நிலையிலும், இரண்டாவதுமுறை எதிர்க்கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி சட்டமன்ற தொகுதிக்கு எதுவும் செய்யக்கூடாது என அம்மையார் மறைந்த ஜெயலலிதா அவர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்த காலத்திலும்கூட, வடநாட்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் நிதியைப்பெற்று வந்து,நலப்பணிகள் செய்த சரித்திரம்
இப்போது உணவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல்துறை அமைச்சராக இருக்கின்ற மாண்புமிகு அர.சக்கரபாணி அவர்களையே சேரும்.!
“விளம்பரம் விரும்பாத வெளிச்சமாகவும்
அனைவரும் விரும்பும் அணிச்சமாகவும்”
“இவருக்கும் தவறுக்கும்” எப்போதும் தொடர்பில்லை என மக்கள் கொண்டாடுவதைத்தொடர்ந்து, மூன்றாவது முறையாகவும் சட்டமன்ற உறுப்பினராக அடியெடுத்துவைத்து ஏவுநராக (கொறடா) எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவந்து, தொகுதி மக்களின் தனிப்பட்ட குறைகளை களைந்து
கிராமத்து பெருசுகள் ஏதாவது என்றால்?
“போன் போடுங்க சக்கரபாணிக்கு” என்கின்ற அளவுக்கு தொகுதியில் செல்லப்பிள்ளையாக நன்கு பரிச்சயம் பெற்றவராக கட்சி கடந்த அனைத்துத் தரப்பினராலும் பேசப்பட்டார்.
நான்காவது முறையா ஒட்டன்சத்திரத்திலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராக அடியெடுத்து வைத்தபொழுது, மீண்டும் அம்மையார் மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சி, மீண்டும் அதே வாய்மொழி உத்தரவு?
அதையும் மீறி மாநிலங்களவை உறுப்பினர்களின் நிதிகொண்டு ஏராளமான திட்டங்கள், தொகுதி மக்களின் சுக துக்கங்களில் இடைவிடாத பங்கேற்பு.
“ஆயிரம் தடைக்கற்கள் உண்டென்றாலும் அவற்றையெல்லாம் தூக்கியெறிந்து தூள்தூளாக்கி” பார்ப்போர் வியக்கவும், கேட்போர் திகைக்கவும் தொடர்ந்து 5வது முறையும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்! ஆனால் என்னவோ? “தங்கம் தரையில் இருக்கும்போது ஒருகாசு நாறத்தேங்காய் உரியிலே ஏறிய கதையாக” 1.1சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்று ஆட்சியை அதிமுக கைப்பற்றியது. மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் “தானாக கிளர்ந்தெழும் தன்மான எரிமலையாக” தன்னை நம்பி வாக்களித்த தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக விடிய விடிய வினையாற்றி வியர்வைப்பாசனம் செய்து, பசிமறந்து தூக்கத்தை துண்டித்து, நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமும், அயராது தொண்டாற்றிய வரலாற்றை யாராலும் மறுக்கவுமுடியாது! மறைக்கவும் முடியாது.!
2011ஆம் ஆண்டில் அப்போது நடைபெற்ற உள்ளாட்சி மன்றத்தேர்தலில், பெருவாரியான இடங்களில் திமுக வெற்றிபெற்று, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், தொகுதியிலுள்ள தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் மாவட்ட ஊராட்சியையும் கழகத்தின் கரங்களுக்கு கொண்டுவந்து சேர்த்தவர் இன்றைய தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி யாவார். அதுமட்டுமல்லாமல், சுமார் 60கோடி ரூபாய் அளவிற்கு MNREGS திட்டத்தின்கீழ் நிதிப்பெற்று வளர்ச்சிக்கு கால்கோள் இட்டார், அதுமட்டுமின்றி மாவட்ட ஊராட்சி நிதி, ஒன்றிய ஊராட்சி நிதி, என எண்ணற்ற திருப்பணிகள் போன்ற பல்வேறு பீடும் பெருமைக்கும் உரியவர் இன்றைய தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் மாண்புமிகு அர.சக்கரபாணி அவர்கள் என்பதே தொகுதி மக்களின் சேதாரமில்லாத உண்மையாகும்!
“எட்டிவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஓயாத உழைப்பை ஒட்டிவைத்து” மாற்றானும் குறைகாணா மாசற்ற மாணிக்கமாய் ஏழைகளின் இதயங்களிலே தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அண்ணன் அர.சக்கரபாணி அவர்களை வாழ்த்துகிற அளவுக்கு எனக்கு வயதில்லை இருந்தாலும் வளமான மனமிருக்கிறது! அவர் அன்றுமுதல் இன்றுவரை, தொகுதி மக்களுக்கு ஆற்றுகிற சேவையை நான் நினைத்துப் பார்க்கிறேன், நினைவோடு அவரை சேர்த்துக்கொண்டு போகிறேன், அவரைப்பற்றி இன்றே நான் எழுதாவிட்டால் என் விழிகளுக்கு தூக்கம் பிடிக்காது! காரணம் அரசியலிலே நம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி போன்றவர்கள் காணமுடியாத காட்டு மூலிகையைப் போல அபூர்வமாக இருக்கிறார்கள்!
எனவேதான் தொகுதி மக்கள் இவரை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடி வருகிறார்கள்! எனவே ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மக்களைப்போல் அண்ணன் அர.சக்கரபாணியை நாமும் கொண்டாட நினைப்பது, நமது கடமையல்ல அது நமக்கு கிடைத்த பெருமை!
ஆக நல்லவற்றை வரவேற்று, நல்லவர்களை கொண்டாடுவோம்!