ஏழை-எளியோரின் காவல் அரண் திமுக:
இயற்கையான மக்கள் தொகை பெருக்கத்தினாலும், கிராமப்பகுதிகளிலிருந்து நகரப்பகுதிகளுக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருவதாலும், கடந்த பத்தாண்டுகளில் நகர்ப்புற மக்கள் தொகை வளர்ச்சியானது 27.16 சதவிகிமாக வளர்ந்தும், அதே நேரத்தில் பேரூராட்சிகளின் மக்கள் தொகையானது 6.49 சதவிகித வளர்ச்சியுமாக மட்டுமே உள்ளது.
திராவிட முன்னேற்ற கழக அரசு பொறுப்பேற்ற இரண்டாண்டில் அபரிமிதமான நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக அனைவருக்கும் இயலக்கூடிய அளவில் குடியிருப்பு வசதியளித்தல் மிகப்பெரும் சவாலாக இருந்தது. மேற்படி சவாலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
குடியிருப்புகளுக்கு அரசாணை வெளியீடு:
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் போதிய வசிப்பிடமின்றி உள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.66.24 கோடி மதிப்பீட்டில் 480 குடியிருப்புகளுக்கும், கீரனூா் பேரூராட்சியில் ரூ.57.04 கோடி மதிப்பீட்டில் 432 குடியிருப்புகளுக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியாகியுள்ளது.
சவாலான நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை:
வாங்கும் திறன் இன்மை, இடத்தின் உரிமை இன்மை, கிராமப்புறங்களில் சொத்துரிமை இல்லாமை, சாதகமான வீட்டுவசதி திட்டங்கள் இல்லாமை, கட்டிடம் கட்டுதல் குறித்த விழிப்புணர்வு இன்மை, பொது நிதி நிறுவனங்களின் நிதி உதவி இன்மை காரணங்களால் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் போதுமான வீட்டுவசதியின்றி வாழக்கூடிய நிலை உள்ளது. இதன் காரணமாக வீட்டுவசதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. தற்போது ஏறத்தாழ 35 சதவிகித வீடுகள் தற்காலிகமானதாகவும், பகுதி தற்காலிகமானதாகவும் அமைந்துள்ளன. இந்த பற்றாக்குறை, நகரங்களிலும் பேரூராட்சிகளிலும் மேலும் அதிகமாக உள்ளது.
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டோம்:
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கீரனூர் பேரூராட்சியில் வசிக்கும் விளிம்பு நிலையிலுள்ள ஏழை- எளிய பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு 480 குடியிருப்புகளும் கீரனூர் பேரூராட்சி 432 குடியிருப்புகளும் கட்டுவதற்கு அரசாணை பிறப்பித்த ஏழைகளின் பாதுகாவலர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.ஐ.பெரியசாமி, திரு.தா.மோ.அன்பரசன் மற்றும் இதற்கென பெருமுயற்சி எடுத்து பெற்றுத்தந்த மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி BA ஆகியோருக்கும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள்:
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு மட்டுமல்லாமல் அனைத்து பிரிவு மக்களுக்கும் தரமான, இயலக்கூடிய அளவிலான விலையில் குடியிருப்பு கட்டிடங்கள் அமைத்து திட்டமிட்ட மற்றும் ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சியை கருத்திற்கொண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.
பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதமாக தனியார் பங்களிப்பில் உருவாகும் கட்டிடங்களில் 10 சதவிகிதம் கட்டிடங்கள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான ஒதுக்கீடாக சட்டபூர்வமாக ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இயலக்கூடிய அளவிலான குடியிருப்பு கட்டிடங்கள் ஏற்படுத்தித்தர பல்வேறு நிறுவனத்தாரும் அரசால் ஈடுபடுத்தப்பட்டு குடியிருப்பு வசதிகள் செய்து வருகின்றனர்.
விரிவான வளர்ச்சி திட்டங்கள்:
மாநிலத்தின் இணக்கமான வளர்ச்சியை கருத்திற்கொண்டு முழுமைத் திட்டங்கள் விரிவான வளர்ச்சித் திட்டங்கள் தயாரித்து செயல்படுத்துதல், நில உபயோக நடைமுறைப்படுத்துதல், திட்டவிதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து வருவது கழக அரசை மக்கள் பாராட்டியும் மேலும், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியின் கோரிக்கையை நிறைவேற்றி, ஏழை-எளிய மக்களின் உள்ளங்களில் தொடர்ந்து இன்ப ஒளி ஏற்றிவரும், திராவிட மாடல் அரசுக்கு தொகுதி மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை காணிக்கையாக்கியும் வருகின்றனர்.