General|

ஆறு மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனைகளை படைக்க முயற்சி எடுத்து அதை 2 மணி நேரத்தில் 6,40,000 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை நிறுவனமே வியக்கும் வகையில் புதிய எலைட் உலக சாதனையை படைத்தனர்.

தமிழகத்தின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி  மற்றும் அவரது குழுவினர் முதல்வரால் தொடங்கப்பட்ட பசுமை தமிழகம் திட்டத்தின்கீழ் பசுமை பணியை மதிக்கும் வகையில் ஆறு மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனைகளை படைக்க முயற்சி எடுத்து அதை 2 மணி நேரத்தில் 6,40,000 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை நிறுவனமே வியக்கும் வகையில் புதிய எலைட் உலக சாதனையை படைத்தனர். பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்காக தற்போது 23 சதவீதமாக இருந்த காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக அதிகரிப்பதே இதன் நோக்கமாகும் டிசம்பர் 23 2022 அன்று ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட இடையகோட்டை கிராமத்தில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது இந்த மாபெரும் வன பிரச்சாரத்தில் சுமார் 16 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டு  இயற்கை அன்னையை பாதுகாக்கவும் பசுமையான சூழலை உருவாக்கிடவும்  பசுமை தமிழ்நாடு என்பதை உறுதி செய்வதில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவது இதன் நோக்கமாகும்.

மாண்புமிகு அமைச்சரின் குறிக்கோள் உலக சாதனையை உருவாக்குவது மட்டுமல்ல மரங்களின் முக்கியத்துவம் மற்றும் மனித குலத்திற்கான அவற்றின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அவரின் நோக்கம். 52 ஹெக்டேர் பரப்பளவில் மரங்களை பாதுகாக்க ஏற்கனவே இரண்டு கிணறுகள் ஆறு ஆழ்துளை கிணறுகள் இரண்டு பண்ணை குட்டைகளை அமைத்துள்ளனர். மழை நீரை அறுவடை செய்வதற்காக நீர்ப்பரப்பு முழுவதும் அகழிகள் உருவாக்கி மேலும் ஒவ்வொரு இடத்தின் மூலையிலும் சரியான நீர் பாசன உள்கட்டமைப்புகளை அமைத்து இந்த இடம் பொது மக்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்றும், மாநிலத்தின் சின்ன சுற்றுலா தளமாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இயற்கை அன்னையை நம்பித்தான் நம் வாழ்வு முழுமையாக இருக்கிறது. இது தமிழக உணவுத்துறை அமைச்சரின் உன்னத முயற்சி. தனது பிரிவினரை ஊக்கப்படுத்தி பொதுமக்களின் கூட்டு ஆதரவுடன் மரக்கன்றுளை நட்டு, பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க திட்டமாக இது இருக்கும். இந்த முயற்சி வெற்றியடையும் என்று மக்கள் நம்புகின்றனர். வன நிலப்பரப்பு மறுசீரமைப்பு என்பது ஒரு சுற்றுச்சூழல் உத்தி மட்டுமல்ல இது ஒரு பொருளாதார மேம்பாட்டு உத்தியும் கூட…. தமிழக உணவு அமைச்சர் சக்கரபாணி அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த மாபெரும் மரம் நடும் திட்டம் உலக அளவில் ட்ரெண்ட் செட்டாராக இருக்கும்.

பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் கொண்ட நீதிபதிகள் குழு இந்த இடத்தை ஆய்வு செய்து மரக்கன்றுகளின் தரம் மண் பரிசோதனை அறிக்கை மற்றும் அனைத்து உள்கட்டமைப்புகளும் குழுவினரால் சரிபார்க்கப்பட்டு வரிசையாக கண்டறியப்பட்டது. தமிழக உணவு அமைச்சர் சக்கரபாணி அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த தொலைநோக்கு திட்டம் மாவட்டத்தில் நிரந்தர சொத்தாக இருக்கும், மேலும் இந்த பொக்கிஷத்தின் மூலம் தொகுதி மக்கள் பெருமளவில் பயனடைவார்கள்.

Comments are closed.

Close Search Window