General|

ஓங்கி ஒலிக்கும் தளபதி மு.க ஸ்டாலின்! அதிரும் இந்தியா!

திமுக தொடங்கப்பட்ட காலம் தொட்டே அதன் அடிநாதமாக இருந்து வருவது சமூகநீதி மாநில சுயாட்சி ஆகும். காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து மாநில  சுய ஆட்சியில் உறுதியாக இருந்து வருகிறது திமுக. திமுக காங்கிரசை வீழ்த்தியதற்கு மாநிலசுயாட்சி என்ற முழக்கத்திற்கு பெரும் பங்கு உண்டு. ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசு மாநில அரசின் உரிமையில் தலையிடும் போது திமுக தலைவர்கள் வெகுண்டெழுந்து மாநில உரிமைகளை பாதுகாத்துள்ளனர். மாநில சுயாட்சிக் கொள்கையை அப்போதைய முதல்வர் தலைவர் கலைஞர்  அவ்வப்போது நினைவுபடுத்தி வந்தார். மாநில சுயாட்சிக்காக பல இடையூறுகளை எதிர்கொண்ட மாபெரும் இயக்கம் திமுக. தற்போது  ஆளுநர் தமிழ்நாட்டின் ஆட்சியை இடையூறு செய்யும் புழுவாக உள்ளதால். மீண்டும் மாநில சுயாட்சியை கையில் எடுத்துள்ளது திமுக.

ஆளுநர் ஆய்வு திமுக கருப்பு கொடி

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்திற்கு ஆய்வுப் பணிக்காக சென்றபோது அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்றனர். திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, பலர் சிறை படுத்தப்பட்டனர், இதனை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்காக போராட்டத்தில் இறங்கினார். ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்பட்டது, ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம் வலுத்தது, ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆளுநர் மாளிகை எச்சரித்தது. ஏழு ஆண்டுகள் அல்ல ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று சொன்னாலும் மாநில சுயாட்சிக்காக திமுக சிறைக்குச் செல்லும், திமுகவினர் அதற்கு தயாராக இருக்கிறார்கள் என பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வழியில் தளபதி ஸ்டாலின் முழங்கினார். அத்துடன்  அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணிக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார். அப்போது தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் மாநில சுயாட்சிக்கு முதல்முதலில் இந்தியாவிலேயே தீர்மானம் கொண்டு வந்தது  தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில்தான்.

ஆட்சியில் அதிமுக இருந்தாலும் சரி அது திமுகவாக இருந்தாலும் சரி ஒரு மாநில அரசின் உரிமைகளை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க திமுக தயாராக இல்லை என தளபதி ஸ்டாலின் அப்போது உறுதிபடத் தெரிவித்தார். மாநில அரசுக்கான ஒவ்வொரு உரிமைகளையும் ஒன்றிய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது, அதேபோல அதிகார மையமாக ஒன்றிய அரசு மாறிவருகிறது, இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாநில சுயாட்சி என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறார். அதன் வெளிப்பாடாகவே  அவரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அமைந்து வருகிறது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது திமுகவின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்திய  அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் கல்வியை ஒன்றிய பட்டியல், மாநில பட்டியல் அல்லது பொதுப் பட்டியலில் சேர்ப்பது என்பது பற்றி நீண்ட விவாதத்துக்குப் பிறகு இறுதியில் கல்வி மாநிலப் பட்டியலில் இருப்பதே சரி என்று மாநிலப்பட்டியலில் சேர்த்தனர். ஆனால் கல்வியை ஒன்றிய அரசு தன்வயப்படுத்தி கொண்டது. இதன் விளைவாகவே அத்துறையில் ஒன்றிய அரசு தற்போது புதிய புதிய சட்டங்களை கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதில் ஒன்றுதான் நீட் தேர்வு,  நீட் தேர்வால் மாணவர்களின் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, அத்தேர்வால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு கானல் நீராக மாறியுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி, தற்போது குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது திமுகவின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.

பேரறிஞர் அண்ணாவுக்கு பின் ஆட்சிக்கு வந்த பிறகு  தலைவர் கலைஞர் அவர்கள் 5 முழக்கங்களை வைத்தார்.

அந்த 5 முழக்கங்களில் ஒன்று “மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தார்” அதை இன்றளவும் எள்முனையளவு கூட பின்வாங்காமல் காப்பாற்றி வரும் இயக்கம் திமுக என்பதே நிதர்சனமான உண்மை.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

Comments are closed.

Close Search Window